கடைசி ஓவர் வீசும்போது என் இதயதுடிப்பு 200ஐ தொட்டது.. வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி பேட்டி

கடைசி ஓவரின் போது என்னுடைய இதயத்துடிப்பு 200 ஐ தொட்டுவிட்டது என வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.
16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 47வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்னே எடுத்தது.
அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 4 ஓவர் வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அப்போது அவர் கூறியதாவது, எனது இதய துடிப்பு நிமிடத்துக்கு 200-யை தொட்டு விட்டது. ஆனால் நீண்ட தூர பகுதியை மனதில் வைத்து நான் அவர்களுக்கு சவால் அளிக்க விரும்பினேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. அது மட்டுமே என் மனதில் இருந்தது. எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.
அதே வேளையில் உங்கள் செயல்பாட்டில் நீங்கள் இருப்பது முக்கியம் உணர்ச்சிகள் எழுந்தவுடன் நமது செயல்முறை மறந்து விடலாம். கடந்த ஆண்டு நான் 85 கி.மீ. வேகத்தில் பந்து வீசினேன். எனவே நான் பல விஷயங்களை முயற்சித்து கொண்டிருந்தேன். அது உண்மையில் உதவுகிறது என்றார்.