RCB அணியின் டிரெசிங் ரூமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த எம்.எஸ்.தோனி.. வைரல் வீடியோ!

 
Dhoni

பெங்களூரு அணியின் டிரெசிங் ரூமுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. 

Dhoni

மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின. 

இந்த நிலையில், நாளை பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் உள்ளது. 

இந்நிலையில், எம்.எஸ்.தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் அறைக்கு செல்லும் எம்.எஸ்.தோனி அங்கு தேநீர் வாங்கி குடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தோனியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

From around the web