சாதனை வீராங்கனை மேரி கோம் திடீர் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Mary Kom

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.

Mary Kom

இந்த நிலையில், வயது கரணமாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மேரி கோம் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், “இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்” என்றார்.

Mary Kom

குத்துச்சண்டை மட்டுமல்லாது விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேரி கோம் தான் இன்ஸ்பிரேஷன். அவரை போல சாதிக்க வேண்டுமென்ற பெருங்கனவுடன் பலர் பயிக்கி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web