90ஸ் கிட்ஸ்களின் நாயகன் ஜான் சீனா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!
பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் மனதை வென்ற மல்யுத்த வீரர் ஜான் சீனா, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் WWE விளையாட்டில் முடி சூடா மன்னனாக ஜான் சீனா விளங்கினார். இதுவரை 16 முறை WWE சாம்பியனாக ஜான் சீனா விளங்கியுள்ளார். 2018-ம் ஆண்டு வரை WWE முழுமையாக கவனம் செலுத்தி வந்த ஜான் சினா,அதன் பிறகு ஹாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இதனால் ஜான் சீனாவால் WWE தொடரில் பெரிய அளவில் விளையாட முடியவில்லை.
எனினும் முக்கிய தொடர்களில் அவ்வப்போது வந்த ஜான் சீனா 2025-ம் ஆண்டு Wrestlemania தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கனடாவில் டோராடூன் நகரில் நடைபெற்ற WWE நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜான் சினா, தன்னுடைய முடிவை அறிவித்தார். இது குறித்து பேசிய அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தம் பணியாற்றி வருகின்றேன்.
இந்த 20 ஆண்டுகள் நான் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமாக திகழ்ந்தேன். என்னுடைய வாழ்க்கையில் எனக்கு நண்பர்கள் இல்லாமல் போகலாம். எனது பெயர் யாருக்கும் தெரியாமல் கூட போகலாம். நான் பல கஷ்டங்களையும் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே என்னுடன் WWE ரசிகர்கள்தான் துணை நின்று எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறீர்கள்.
இதனால் தான் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருக்கிறேன். 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து WWE Netflix தளத்திற்கு மாறுகிறது. இது ஒரு புதிய வரலாறு ஆகும். அந்த வரலாற்றிலும் இடம் பெற போகிறேன். 2025-ம் ஆண்டு நடைபெறும் ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் Wrestlemania போன்ற தொடர்களில் பங்கேற்பேன்.
#JohnCena is retiring from WWE in 2025 💔💔 & we are not ready for this. 😢😢😢
— H K (@tweetsbyhk) July 7, 2024
a TRUE WWE LEGEND 🫡#ThankYouCena #JohnCena pic.twitter.com/oTNuXXao2r
Wrestlemania தொடர் தான் என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதிலிருந்து நான் போட்டியில் இருந்து ஓய்வு பெற போகிறேன். ரசிகர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து அவர்களிடம் நன்றி தெரிவிக்க தான் இங்கு நான் வந்தேன். இந்த சில மாதங்கள் நான் உங்களுடைய தான் இருப்பேன். WWE வீரனாக என்னுடைய கடைசி அத்தியாயம் தொடங்குகின்றது என்று ஜான் சீனா கூறினார். ஜான் சீனாவின் இந்த பேச்சு ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிலைகுலைய செய்திருக்கிறது.