ஐபிஎல் போட்டி தேதியில் திடீர் மாற்றம்.. காரணம் இதுதான்!

 
IPL

ராமநவமியை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

17-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

IPL

இதுவரை நடந்த 15 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்திலும், கொல்கத்தா அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2வது இடத்திலும், சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

வரும் 17-ம் தேதி ராமநவமி கொண்டாடப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் மிக விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும் என்பதால், அன்றைய தினம் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி முந்தைய நாளான 16-ம் தேதி கொல்கத்தாவில் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேபோல், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் ஆட்டம் இப்போது ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை ஏப்ரல் 16-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. 

From around the web