ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. முதல் இடத்திற்கு முன்னேறினார் இந்திய வீரர் அஸ்வின்!

 
Ashwin

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களின் சிறப்பான ஆட்டத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வீரர்களுடைய தரவரிசை பட்டியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. 

Ashwin

அந்த வகையில், டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்திலும்,ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும், பும்ரா 4வது இடத்திலும் ஜடேஜா 8வது இடத்திலும் உள்ளனர்.


 

From around the web