உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி!

 
Aus vs SAF Aus vs SAF

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , பவுமா களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 35 ரன்கள் எடுத்திருந்த போது பவுமா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Aus vs SAF

சிறப்பாக விளையாடி வந்த டி காக் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து, டி காக் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையத்து மார்க்ரம் - கிளாசன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரை சதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சிலும், கிளாசன் 29 ரன்னில் ஹசில்வுட் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து 312 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முறையே 7 மற்றும் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் விளையாடி வந்த லபுஷேன் நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Aus vs SAF

அதன்படி போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர கேசவ் மகாராஜ், தப்ரிஸ் சம்சி மற்றும் யன்சன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

From around the web