மகிழ்ச்சி... நார்வே நாட்டு டான்ஸ் குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி..! வைரல் வீடியோ

 
Kholi

நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து விராட் கோலி டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் குவித்து பல சாதனைகளை கடந்தார்.

Kholi

இதற்கிடையில், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பிடியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

A post shared by Quick Style (@thequickstyle)

இந்த நிலையில் விராட் கோலியின் டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், Quick Style என்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து Ishq Ho Gaya என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். Baar Baar Dekho என்ற படத்தில் இடம் பெற்றுள்ள  Kala Chashma என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

From around the web