ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் தங்கம்.. புது வரலாறு படைத்த இந்தியா!

 
Asian games

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. தற்போது19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் இடம்பெறாத நிலையில், இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

asian games

இந்த இரு அணிகள் இடையே ஆன இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஆப்கன் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. ஆனாலும், தொடர்ந்து அந்த அணி ரன் குவிக்க தவறவில்லை. ஒரு ஓவருக்கு 6 ரன் என்ற ரன் ரேட்டை தக்க வைத்தது அந்த அணி.

இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஷாபாஸ் அஹமத் என மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தனர் ஆப்கன் பேட்ஸ்மேன்கள். ஆனால், ரவி பிஷ்னோய் வீசிய ஸ்பின் பந்துகளில் பெட்டிப் பாம்பாய் அடங்கியதால் ரன் ரேட் ஆறை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்தது.

cricket

ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்த நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தரவரிசைப்படி இந்தியா முன்னணியில் இருந்ததால் இந்தியா தங்கம் வென்றதாகவும், ஆப்கானிஸ்தான் வெள்ளி வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மகளிர் கிரிக்கெட் அணியும் கிரிக்கெட்டில் தங்கம் வென்று இருந்தது. முதன்முறையாக ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்ற இந்தியா மகளிர் பிரிவு, ஆடவர் பிரிவு என இரண்டிலும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறது.

From around the web