தவறி விழுந்து உயிரிழந்த பிரபல கால்பந்து வீராங்கனை.. சோகத்தில் ரசிகர்கள்!

 
Violeta Mițul

பிரபல கால்பந்து வீராங்கனை மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக இருப்பவர் வயலட்டா மிதுல் (26). இவர் அந்நாட்டு தேசிய அணிக்காகவும், ஐஸ்லாந்து நாட்டின் கிளப் கால்பந்து அணிக்காகவும் விளையாடி வந்தார். இதுவரை 40 சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.

Violeta Mițul

இந்த நிலையில், வயலட்டா மிதுல் கடந்த 4-ம் தேதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் ஐஸ்லாந்தில் உள்ள வாப்னாப்யூர் மலைத்தொடரில், மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டார். 

அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் அவரது உடலை மீட்டனர். 


இதுதொடர்பாக ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் மால்டோவா கால்பந்து அணி நிர்வாகம் உள்ளிட்டவை தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளன. மேலும், கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் அழ்ந்துள்ளனர்.

From around the web