உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

 
NL vs Eng

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

இந்த ஜோடியில் பேர்ஸ்டோ 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் ஓரளவு தாக்குப் பிடித்தநிலையில் 28 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவு செய்த டேவிட் மலான் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹேரி புரூக் 11 ரன்களும், ஜோஸ் பட்லர் 5 ரன்னும், மொயின் அலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

Eng vs Ned

அடுத்ததாக பென் ஸ்டோக்சுடன், கிரிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ரன்களை குவித்த இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.  மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிரிஸ் வோக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 51 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய டேவிட் வில்லி 6 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர் உள்பட 108  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அடில் ரஷித் 1 ரன்னும், அட்கின்சன் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பாஸ் லீ லீடே 3 விக்கெட்டுகளும், லோகன் வேன் பீக் மற்றும் ஆர்யன் டூட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Eng vs Ned

இதையடுத்து, 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினர் துல்லியமாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்னும், வெஸ்லி பரேசி 37 ரன்னும், சைப்ரண்ட் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். தேஜா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டும், டேவிட் வில்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

From around the web