தான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை... சென்னை ரசிகர்களுக்கு ஷாக் தகவல் கொடுத்த தீபக் சஹார்..!

 
Deepak Chahar

காயத்திலிருந்து மீண்டுள்ள சென்னை அணி வீரர் தீபக் சஹார், தான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

Deepak Chahar

இதில் முதலில் பேடிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டுள்ள சென்னை அணி வீரர் தீபக் சஹார், தான் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

Deepak Chahar

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின் பேசிய அவர், ஒவ்வொரு முறை காயம் அடையும் போதும் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமெனவும், அது கடினமான காரியம் எனவும் தெரிவித்தார். இன்னும் 100 சதவீத உடல் தகுதியை எட்டவில்லை என குறிப்பிட்ட அவர், தன்னால் இயன்றவரை அணிக்கு பங்களிப்பு செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

From around the web