சென்னை அணியை விமர்சித்த பதிவு.. லைக் போட்டு சிக்கி கொண்ட ஜடேஜா!!

 
CSK

சென்னை சூப்பர கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு போட்டிருந்த ஒருவரது ட்வீட்டுக்கு ரவீந்திர ஜடேஜா லக்போட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் இந்த தொடர் தொடங்கிய நிலையில் தற்போது 2 வது லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நடப்பு சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 4 தோல்விகள், ஒரு போட்டி ரத்துடன் 15 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தில் இருக்கிறது.

MSD Jaddu

இந்நிலையில், சென்னை சூப்பர கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு போட்டிருந்த ஒருவரது ட்வீட்டுக்கு ரவீந்திர ஜடேஜா லக்போட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஜடேஜாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜடேஜா பேட்டியில் முகத்தில் போலி சிரிப்புடன் இவ்வாறு கூறி இருக்கிறார். ஆனால் அவர் மனதில் பல காயங்களும் வலிகளும் இருக்கிறது. கண்டிப்பாக சொல்கிறேன் ஜடேஜா மனதளவில் வருத்தப்படுகிறார். யோசித்துப் பாருங்கள் உங்களுடைய சொந்த ரசிகர்களே நீங்கள் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு வலியை கொடுக்கும். ஜடேஜா மூன்று முறை ஆட்டநாயகன் விருதை வென்ற பிறகும் சிலர் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று அந்த பதிவு போடப்பட்டிருக்கிறது. 

இதற்கு ஜடேஜா லைக் போட்டது தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. தோனியை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதே மாதிரி ஜடேஜாவும் பேட்டிங்கில் சொதப்புகிறார் என்பது அவ்வளவு உண்மை. ஜடேஜா பேட்டிங்கில் சரியாக விளையாடாததால் தான் ரசிகர்கள் இவ்வாறு செய்கிறார்கள். 

Jaddu

ஆனால் ஜடேஜா பந்து வீசும் போது எப்போதும் போல ரசிகர்கள் அவருக்காக குரல் கொடுத்து தான் இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களின் இந்த நடவடிக்கை ஜடேஜாவுக்கு பொறாமை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் தான் இந்த விமர்சனப் பதிவுக்கு ஜடேஜா லைக் போட்டு இருக்கிறார் என சில ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

From around the web