பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று

 
Sourav-Ganguly

சவுரவ் கங்குலி குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கங்குலி கொரோனாவில் இருந்து மீண்டார். அவரை 2 வாரங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகள் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து கங்குலியின் மனைவி டோனாவிற்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web