ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. விக்கெட்களை அள்ளும் முகமது சிராஜ்.. திணறும் இலங்கை அணி!

 
Siraj

16வது ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பவர்பிளே முடிவதற்குள் சிராஜ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தி உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா - இலங்கை இடையேயான இறுதிப்போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

asia cup

இந்த நிலையில் மழை காரனமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதை அடுத்து ஆட்டம் ஆரம்பமாகி உள்ளது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே பும்ரா அபாரமாக பந்து வீசி குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார்.

இதன் பின்னர் முகமது சிராஜ் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா, சமரவிக்ரம, அசலன்கா மற்றும் தனஞ்சயா டி சில்வா 4 பேரின் விக்கெட்டையும் கைப்பற்றினார். மேலும் தனது அடுத்த ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா விக்கெட்டை வீழ்த்தினார். 12வது ஓவரில் மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினர்.


இதன் மூலம் சிராஜ் பவர்பிளே முடிவதற்குள் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது வரை இலங்கை அணி 11.2 ஓவர்களில் 33 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. மெண்டிஸ் 17 ரன்களும் வெல்லலகே 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 

From around the web