இந்திய அணியில் மீண்டும் அஸ்வின்.. 18 மாதங்களுக்கு பிறகு கம்பேக்! முக்கிய வீரர்கள் 3 பேருக்கு ரெஸ்ட்

 
Ashwin

இந்திய அணியில் 18 மாதங்களுக்கு பிறகு ஸ்பின் ஆல்ரவுண்டரான அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்ர் 22 முதல் 27 வரை நடைபெறுகிறது. முதல் போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி மெஹாலியில் நடைபெறுகிறது. இதையடுத்து இந்த தொடரில் விளையாடும்  இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திகா பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் இரண்டு ஆட்டங்களுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம் பெற்றுள்ளார்.

BCCI

அதேபோல் பவுலிங் ஆல்ரவுண்டரான அக்‌ஷர் படேல் காயமடைந்திருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். கூடுதல் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதன் மூலம் 18 மாதங்கள் கழித்து அஸ்வின் ஒரு நாள் அணிக்கு கம்பேக் கொடுக்கிறார். கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் தென்ஆப்பரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Ashwin

முதல் 2 ஆட்டங்களுக்கான இந்திய அணி: கே.எல் ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர்.அஸ்வின்

From around the web