5 மாதங்களுக்கு பின்.. மீண்டும் இந்திய அணியில் கே.எல்.ராகுல்..!

 
KL Rahul

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் விளையாடும் இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிந்து தற்போது சூப்பர் 4 சுற்று நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டி கொழும்புவில் இருக்கும் பரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும், இன்றைய மழை நிலவரத்தைப் பொறுத்து பாகிஸ்தான் அணி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை பிளேயிங் லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

KL Rahul

ஏனென்றால் காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கட்டாயம் அணியில் இடம்பெறுவாரா? அல்லது இந்தப் போட்டியில் வெளியே உட்கார வைக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து குணமடைந்து இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இஷான் கிஷனின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவர் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா, சர்பிரைஸ் முடிவாக ஸ்ரேயாஸ் அய்யர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதனால் இஷான் கிஷனின் இடம் தப்பியது.

KL Rahul

ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் நீக்கப்பட்டார் என்று விசாரிக்கும்போது அவருக்கு முதுகு வலி காரணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், அவருக்கு பதிலாக களமிறங்கியிருக்கும் கேஎல் ராகுல் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ச்சியாக பார்ம் அவுட்டில் இருந்த ராகுல், திடீரென காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். 

அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுவது குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிச் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கும். 

From around the web