14 மாதங்களுக்கு பின்.. மீண்டும் களம் இறங்கும் ரிஷப் பண்ட்.. அதிரடியாக ஆடுவாரா?

 
Rishab Pant

 விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட், 14 மாதங்களுக்கு பிறகு இன்று நடைபெறும் போட்டியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். 

17-வது ஐபிஎல் டி20 தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று  கோலாகலாமாக தொடங்கியது. இதன் தொடக்க போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்த தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

Rishab-Pant

இந்த போட்டி ரசிகர்கள் மட்டுமல்லாது பல முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 15 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். 

Rishab-pant

கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். கடந்த வருடம் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை கவனித்த நிலையில் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியை எட்டியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். நீண்ட நாட்கள் கழித்து விளையாடப்போகும் ரிஷப் பண்டின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

From around the web