மகளிர் ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றியது வயாகாம்18!! எவ்வளவு தெரியுமா?

 
WIPL

மார்ச் மாதம் நடைபெற உள்ள மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வயாகாம் நிறுமனம் ரூ. 951 கோடிக்கு வென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

2023 மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆடவர் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டி நடத்த நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2023 பிப்ரவரியில் நடைபெறும் மகளிர் டி-20 உலகக் கோப்பைக்கு பின்னர், மார்ச் மாதம் இந்தியாவில் மகளிர் ஐபிஎல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், மொத்தம் 5 அணிகள் பங்கேற்று, மற்ற அணிகளுடன் ரவுன்ட்-ராபின் முறையில் தலா இரு போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. லீக் முடிவில் முதல் இடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி இறுதிக்குள் நுழையும்.

WIPL

அதன்படி 20 லீக் உட்பட மொத்தம் 22 போட்டிகளை நடத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், ஒவ்வொரு அணியும் 18 வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இதில், அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீராங்கனைகள் அங்கம் வகிக்கலாம்.  மேலும், ஆடும் லெவனில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் பங்கேற்கலாம்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, ஒளிபரப்பு நிறுவனமான வயாகாம் (Viacom 18) மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் (WIPL) ஒளிபரப்பு உரிமையை ரூ.951 கோடிக்கு வென்றுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வயாகாம் 5 ஆண்டுகளுக்கு மகளிர் ஐபிஎல்லை  ஒளிபரப்பும். தற்போதைய நிலவரப்படி, மகளிர் ஐபிஎல்லில் ஒரு போட்டியின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மகளிர் ஐபிஎல் ஊடக உரிமைகளை வென்றதற்கு வயாகாமிற்கு வாழ்த்துக்கள். பிசிசிஐ மீதான உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. வயாகாம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2023-27) ஒரு போட்டியின் மதிப்பான ரூ.7.09 கோடிகள் அதாவது ரூ.951 கோடிகளை வழங்கியுள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரியது.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மகளிர் ஐபிஎல்லில் பங்கேற்கும் அணிகள் குறித்த விபரங்களை வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web