தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: தங்கம் வென்று வரலாற்று சாதணை படைத்த இந்திய அணி!!

 
Thomas-cup

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்து நாட்டில், பேட்மிண்டன் தொடர்களிலேயே மிக முக்கிய தொடராகக் கருதப்படும் தாமஸ் கோப்பை தொடர் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் போட்டியில், 12-ந் தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது.

இதில், இந்திய அணி ஒற்றையர் பிரிவில் லக்ஷய சென் மற்றும் ஶ்ரீகாந்த் கிடாம்பியும், இரட்டையர் பிரிவில் சீரக் செட்டி, ரங்கி ரெட்டி இணையும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என வெற்றியை பதிவு செய்தது.

73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web