ஓய்வு பெறுகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

 
Sania MIrza

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பிப்ரவரியில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டென்னிஸ் உலகில் நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வந்தவர் சானியா மிர்சா. 2003-ம் ஆண்டில் தான் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்றார். 36 வயதான சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

Sania MIrza

2005-ம் ஆண்டில் நடைபெற்ற WTA தொடரில், ஒற்றையர் பரிவில் பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். கடைசியாக, ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், முதல் சுற்றில் தோற்ற நிலையில் 2022 சீசனோடு ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.

இந்த நிலையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அடுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது.

Sania MIrza

மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார். மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார். முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார்.

From around the web