ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி

 
shereyas-iyer

காயம் காரணமாக இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிருந்து விலகியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (ஜன. 18) நடக்கிறது.

shereyas-iyer

இந்த நிலையில் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிருந்து இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் ரஜத் படிதார் சேர்க்கப்ட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதுகு வலி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்படவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் 3 போட்டிகளிலும் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web