மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு... அமைப்பின் தலைவர் எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!!

 
Sakshi Malik

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்த அவர்கள், பல வீராங்கனைகளுக்கு அவர் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தனர். தங்களுக்கு நாளை ஏதேனும் நடந்தால் அதற்கு பிரிஜ் பூஷன் தான் காரணம் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்தனர்.

விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என கனவுகளோடு வரும் வீராங்கனைகள் பலரையும் பயிற்சியாளர்கள் தங்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை வேண்டுமென்றே விளையாட்டில் முன்னேற விடாமல் தடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

Sakshi Malik

ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு செல்லும் போது தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட மல்யுத்த கூட்டமைப்பு செய்து தருவதில்லை என கூறும் வீராங்கனைகள், இதுகுறித்து கேட்டால் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தனர்.

பாலியல் ரீதியான அத்துமீறல்களை எதிர்த்து கேட்கும் ஒவ்வொரு முறையும் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கும் வீராங்கனைகள் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால் வேறு வழியின்றி போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலையிக்கு ஆளானதாக கூறினர்.

Sakshi Malik

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் ஒன்று திரண்டு தங்கள் அமைப்பிற்கு எதிராகவும், பயிற்சியாளர்களுக்கு எதிர்க்குரல் எழுப்பி போராட்டம் நடத்தி வருவது விளையாட்டுத்துறை வட்டாரத்திலும், அரசியல் ரீதியாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

From around the web