மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறினார் ரொனால்டோ.! கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி

மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனடியாக விலகுவதாக கிளப் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009-ம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.
தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ , தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், ரூனி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
அது தொடர்பாக பேட்டியளித்த ரொனால்டோ, “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை” என்று மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
Cristiano Ronaldo is to leave Manchester United by mutual agreement, with immediate effect.
— Manchester United (@ManUtd) November 22, 2022
The club thanks him for his immense contribution across two spells at Old Trafford.#MUFC
இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.