இந்தியாவின் முதல் டைமண்ட் லீக் பதக்கத்தை வென்று சாதித்தார் நீரஜ் சோப்ரா!!

 
Neeraj

டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தளகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார். இதன் மூலம் அதிக தூரத்திற்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் தனது நான்காவது முயற்சியில் 86.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Neeraj

இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இதையடுத்து நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பலதரப்பினரிடையே இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

24 வயதான இந்திய சூப்பர் ஸ்டார் நீரஜ் சோப்ரா, இப்போது ஒலிம்பிக் சாம்பியன், உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் மற்றும் டயமண்ட் லீக் சாம்பியனாக உள்ளார். இவை அனைத்தையும் அவர் வெறும் 13 மாதங்களில் சாதித்துவிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் இந்தியாவின் தங்க வீரர்.


இந்த சீசனில் அவர் 6 முறை 88 மீ-பிளஸ் த்ரோவை உருவாக்கியுள்ளார், இது அவரது நிலைத்தன்மையைக் காட்டியது. இந்த சீசனில் அவர் எட்டிய 89.94 மீட்டர் தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

டயமண்ட் லீக் பைனலில் சோப்ராவின் மூன்றாவது முறையாக கலந்துக் கொண்டார். 2017 மற்றும் 2018-ல் இந்த போட்டியில் கலந்துக் கொண்டு முறையே ஏழாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற நீரஜ் சோப்ராவுக்கு டயமண்ட் டிராபி, 30,000 டாலர் பரிசுத் தொகை மற்றும் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்காக வைல்ட் கார்டு வழங்கப்பட்டது.

From around the web