விரைவில் KL ராகுல் திருமணம்.. முழு வீச்சில் நடக்கும் திருமண ஏற்பாடுகள்!!

 
KL-Rahul

கே.எல்.ராகுல், தனது நீண்டநாள் தோழியான அதியா ஷெட்டியை வரும் 23-ம் தேதி திருமணம் செய்ய உள்ள நிலையில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாவும், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இந்த இளம் ஜோடி 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வந்தன.

சமீபத்தில் கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற போது அவருடன் அதியாவும் சென்றிருந்தார். இருவர் பற்றியும் பல கிசுகிசுக்கள் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அதியா ஷெட்டியின் பிறந்தநாளன்று, ராகுல் இறுதியாக இருவரது உறவும் குறித்தும் இன்ஸ்டாகிராம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

KL Rahul

இந்த நிலையில், வரும் 23-ம் தேதி கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் தேதி குறித்து முறையான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. ஆனால், அதியா ஷெட்டியின் விக்கிப்பீடியா பக்கத்தில் முதலில் குறிப்பிடப்பட்டு பின்னர் அது நீகக்ப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.

திருமணத்திற்கு முன்னதாக வரும் 21-ம் தேதி சங்கீத நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதியா ஷெட்டியின் சகோதரர் மற்றும் பெற்றோர்களும் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். கே.எல்.ராகுல் அதியா ஷெட்டி திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருமணத்தை முன்னிட்டு கே எல் ராகுல் குடியிருக்கும் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

KL Rahul

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் ஓகே சொன்னதைத் தொடர்ந்து இந்த திருமணம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண நிகழ்ச்சியில் விராட் கோலி, எம் எஸ் தோனி, அக்‌ஷய் குமார், ரோகித் சர்மா, சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கே எல் ராகுல் இடம் பெறவில்லை. குடும்பத்தில் உள்ள கடமைகள் காரணமாக அவர் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web