2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 அணி.. இந்தியாவில் இருந்து 3 வீரர்கள்..!

 
ICC T20

ஐசிசியின் 2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலககோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா 1 வீரர்களும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.

ICC

ஐசிசி அறிவித்துள்ள 2022-ம் ஆண்டுக்கான டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து 3வது மற்றும் 4வது வரிசையில் ஆட இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நமப்ர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 5வது இடத்துக்கு நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் க்ளென் பிலிப்ஸ் தேர்வாகி உள்ளார். தொடர்ந்து ஆல்ரவுண்டர்களாக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, இந்தியாவின் ஹர்த்திக் பாண்ட்யா, இலங்கையின் வனிந்து ஹசரங்கா, டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் சாம் கர்ரன் ஆகியோர் தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.


10 மற்றும் 11வது இடத்துக்கு பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் மற்றும் அயர்லாந்தின் ஜோஸ் லிட்டில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி அறிவித்த 2022ம் ஆண்டுக்கான டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி அறிவித்த அணியில் சாம் கர்ரன் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி விவரம்: 1. ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து) 2. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) 3. விராட் கோலி (இந்தியா) 4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) 5. க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) 6. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) 7. ஹர்த்திக் பாண்ட்யா (இந்தியா) 8. சாம் கரன் (இங்கிலாந்து) 9. வனிந்து ஹசரங்கா (இலங்கை) 10. ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்) 11. ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து)

From around the web