அனைத்து வகையான கிரிக்கெட்டில இருந்து பிரபல சிஎஸ்க வீரர் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

 
Robin-Uthappa

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா.

36 வயதான ராபின் உத்தப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2006-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 1,183 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் அரங்கில் மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை போன்ற அணிகளுக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,952 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

Robin-Uthappa

இந்நிலையில், அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பிசிசிஐ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது. ரசிகர்களும் அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் ஆகிறது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.

இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.


எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு ராபின் நன்றி. அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.

From around the web