2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது இங்கிலாந்து..!

 
England

டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின. 

இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று (நவ. 13) நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

Pakistan

தொடக்க வீரர்களாக பாபர் அசாம், முகமது ரிஸ்வான் களமிறங்கினர். தொடக்க விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடியாக ஆடினார். மறுபுறம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்த பாபர் அசாம் 32 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த இப்திகார் அகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்னாக இருந்த போது சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த ஷதாப் கான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ் களமிறங்கினர். ஷஹீன் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் 1 ரன்களுக்கு அலெக்ஸ் ஹாலெஸ் வெளியேறினார், மறுபுறம் பட்லர் அதிரடியாக விளையாடினார்.

England

பின்னர் பில் சால்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், தொடர்ந்து பட்லர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் பென் ஸ்டோக்ஸ் , ஹார்ரி புரூக் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்த்னர். புரூக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டோக்ஸ், மொயீன் அலி இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். 

சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது. இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.

From around the web