ஒட்டுமொத்த தேர்வுக்குழுவும் கலைப்பு.. சாட்டையை சுழற்றிய பிசிசிஐ!!

 
Chetan-sharma

இந்திய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த தேர்வுக்குழுவினரையும் பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8வது டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடினாலும், அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால், ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், டி20 உலககோப்பை தோல்விக்கு தேர்வுக்குழுவின் தவறான அணுகுமுறையே காரணம் என்று கூறப்பட்டது.

BCCI

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி (தெற்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் (மத்திய மண்டலம்) மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி (கிழக்கு மண்டலம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை பிபிசிஜ கூண்டோடு கலைத்துள்ளது. 

தற்போது புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணபிக்க கூறி, பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 7 டெஸ்ட் போட்டி அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆகிய தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவர்கள் தான் இந்த பணிக்கு விண்ணபிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.


கடந்த மாதம் மும்பையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தின்போதே புதிய தேர்வுக் குழு அமைக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குறிப்பிட்டிருந்தார். அதன்படி, இப்போது தேர்வுக்குழு கலைக்கப்பட்டுள்ளது.

From around the web