இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஆண் குழந்தை... குவியும் வாழ்த்து!!

 
Kurnal-pandya

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்டியா தனக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் க்ருணால் பாண்டியா. 31 வயதான இவர் இந்தியாவுக்காக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், ஒரு அரை சதம் உட்பட 65.00 சராசரியில் 130 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், அவர் 19 டி20 போட்டிகளில் விளையாடி 24.80 சராசரியில் 124 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Kurnal-pandya

நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இவர், கடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியில் இடம் பெற்றார். அந்த அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 183 ரன்கள் எடுத்தார். மேலும் 10 விக்கெட்களை எடுத்தார்.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த மாடல் பன்குரி ஷர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு க்ருணால் பாண்டியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்று (ஜூலை 24) ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி குழந்தையினை கையில் வைத்துக்கொண்டு தனது அருகில் அமர்ந்திருக்கும் புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதில், க்ருணால் பாண்டியா தனது முதல் குழந்தையின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். தங்களது குழந்தைக்கு க்ருனால் பாண்டியா மற்றும்  பன்குரி ஷர்மா தம்பதியினர் கவிர் க்ருனால் பாண்டியா என பெயரிட்டுள்ளனர்.  பிறந்த குழந்தையை க்ருனால் பாண்டியாவும் அவரது மனைவியும் கட்டித் தழுவிக்கொண்டிருக்க, அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

From around the web