காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டி: தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி

 
India
லான் பவுல்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.
Cwg
இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்த முறை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
நேற்று நடைபெற்ற லான் பவுல்ஸ் விளையாட்டில் லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்து வரலாறு படைத்து இருந்தது. இந்த நிலையில் இந்த நால்வர் கொண்ட அணி இன்று நடந்த இறுதி போட்டியில் அனுபவம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
Cwg
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த விளையாட்டில் முன்னணி அணிகளை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்து இருக்கிறது. காமன்வெல்த் போட்டியில் இந்த விளையாட்டில் இந்திய அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதன் மூலம் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

From around the web