காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் துலிகா மான் இறுதிப் போட்டிக்கு தகுதி!!

 
Tulika-Mann

காமன்வெல்த் மகளிர் ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது.

இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். இதுவரை 5 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோவில் 78+ கிலோ எடைப்பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ட்ரேசி டர்ஹோன் ஆகியோர் மோதினார்.

இப்போட்டியில் துலிகா மான் ,மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிபோட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

From around the web