சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.!!

 
Sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனை வாங் ஷியை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சிங்கப்பூரில் சூப்பா் 500 பாட்மின்டன் ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரை இறுதி போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி.சிந்து ஜப்பானின் சனா கவாகமியை எதிா்கொண்டாா். 32 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றாா்.

Sindhu

இந்நிலையில், சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில், சீன வீராங்கனை வாங் ஷியை எதிா்கொண்ட பி.வி.சிந்து, சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சீனாவின் வாங் ஷியை 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரை பிவி சிந்து வெல்வது இதுவே முதன்முறை ஆகும். அதேபோல் இந்த தொடரை வெல்லும் இரண்டாவது பெண் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆவார். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு சாய்னா நேவால் இந்த தொடரை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sindhu

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்துவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

From around the web