இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!! மல்யுத்த போட்டியில் வினேஷ் போகட் தங்கம் வென்றார்

 
vinesh-phogat

இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தொடர்ந்து 3 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 10 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

vinesh-phogat

இந்நிலையில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் இலங்கையின் சாமோத்யா கேஷானி மதுரவ்லாகே டானை சந்தித்தார். இதில் வினேஷ் போகட் சாமோத்யா கேஷானி மதுரவ்லாகே டானை வீழ்த்தியதின் மூலம் தங்க்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் தொடர்ந்து 3 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், ஒலிம்பிக்கிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

vinesh-phogat

இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்துயாவின் பதக்க எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 11 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 33 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

From around the web