தொடர்ந்து 5 சதம்: வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஜெகதீசன்!!

 
Jagadeesan

முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனை படைத்ததுடன் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் தற்போது உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

Jagadeesan

இந்த தொடரில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழ்நாடு அணி 4 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன் மூலம் தமிழ்நாடு அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்த தொடரில் ஆரம்பம் முதலே தமிழ்நாடு அணியின் வீரர் நாராயண் ஜெகதீசன் அபாரமாக ஆடி வருகிறார். இவர் நேற்றைய போட்டியில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலமாக விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் சதமடித்து உலக சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 114 பந்துகளில் ஜெகதீசன் 19 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் இரட்டை சதமடித்தார். 

Jagadeesan-Dhoni

முதல்தர கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கரா 2015ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சாதனை படைத்தார். அதேபோல விஜய் ஹசாரே தொடரில் கர்நாடக வீரரான தேவ்தத் படிக்கல்லும் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரரான பீட்டர்சனும் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெகதீசன் இன்று படைத்துள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஜெகதீசன், இம்முறை சென்னை அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web