3 பாரா ஒலிம்பிக்ஸ்.. 3 பதக்கங்கள்.. ஹாட்ரிக் சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலு!
பாராலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக 3வது முறையாக பதக்கம் பெறும் இந்திய வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதனை அடுத்து மூன்றாவது முறையாக மாரியப்பன் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. டி 63 பிரிவில் இந்திய வீரர்கள் ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தினர்.
இதில் குறைந்தபட்ச உயரமான 1.81 மீட்டர் தூரத்தை இந்திய வீரர்கள் சரத், மாரியப்பன் சைலஸ் குமார் ஆகிய மூன்று பேரும் தாண்டி சென்றனர். இதன் அடுத்து 1.85 மீட்டர் தூரத்தை மாரியப்பன் அபாரமாக தாண்டி முதலிடத்தை பிடித்தார். ஆனால் 1.88 மீட்டரில் சரத்குமார் மற்றும் அமெரிக்க வீரர் ஏல்ரா அபாரமாக தாண்டி மாரியப்பனை முந்தினார்.
எனினும் மாரியப்பன் 1.88 மீட்டர் உயரத்தை தாண்ட முடியவில்லை. இதனை அடுத்து மாரியப்பனுக்கு மூன்றாவது இடமே கிடைத்தது. தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட சரத்குமார் 1.88 மீட்டர் உயரத்தை தாண்டினார். அதன்பிறகு 1.91 மீட்டர் தூரத்தை தாண்டும் போது சரத்குமாரால் தாண்ட முடியவில்லை. இதை @டுத்து அமெரிக்க வீரர் ஏல்ரா 1.94 மீட்டர் உயரத்தை தாண்டி தங்கப்பதக்கத்தை பெற்று சென்றார்.
இதனை அடுத்து சரத்குமாருக்கு வெள்ளிப் பதக்கமும் மாரியப்பனுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. இதன் மூலம் இந்தியா மூன்று தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 18 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது. கடந்த டோக்யோ பாரா ஒலிம்பிக் போட்டியிலும் இதே அளவுதான் இந்தியா பதக்கத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாரா ஒலிம்பிக்கில் மூன்று பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற சாதனை மாரியப்பன் தங்கவேலுக்கு சொந்தமானது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் மாரியப்பனது கிடைத்திருக்கிறது.