வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா.. இன்று மாலை பெரிய தேர் பவனி!

 
velankanni velankanni

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி இன்று (செப். 7) பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா’ என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது. வங்கக்கடல் ஓரத்தில் ஆலயம் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.

velankanni

மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8-ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், வேளாங்கண்ணி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (செப். 7) மாலை நடைபெறுகிறது. தேர்பவனியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்துள்ளனர். 

velankanni

இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8-ம் தேதி ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web