இன்று புனித வெள்ளி.. சிலுவையில் இயேசுவின் ஏழு வார்த்தைகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு சிலுவையில் மரித்தததை ‘புனித வெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகிரார்கள். இயேசு சிலுவையில் தொங்கியபோது ஏழு வாசகங்களை கூறியுள்ளார். அதனை, ஒவ்வொரு வருடமும் ‘புனித வெள்ளி’ அன்று அணைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பிரசங்கிப்பது வழக்கமாக இருக்கிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டதற்கு பைபிளில் சொல்லப்பட்ட ஏழு வார்த்தைகள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
சிலுவையில் முதல் வார்த்தை:
1.“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியா திருக்கிறார்களே” (லூக்கா 23:34)
பொருள்:
இயேசு அவர்கள், சிறிய குழந்தை தெரியாமல் தவறு செய்ததைப்போல, தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். அவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்துவிட்டார்கள் என்று பிதாவிடம் மன்னிக்க வேண்டும் என்று கூறினார்.
சிலுவையில் இரண்டாம் வார்த்தை:
2. “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலுருப்பாய்” (லூக்கா 23:43)
பொருள்:
“இரட்சிப்பின் வார்த்தை” என்று அழைக்கப்படுகிறது. இது சொர்க்கத்திற்கு நேரடி பயணமாக கருதப்படுகிறது.
சிலுவையில் 3 வது வார்த்தை:
3.“இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26-27).
பொருள்:
“உறவின் வார்த்தை” என்று குறிப்பிடப்படும், இயேசு தனது தாயான மரியாவை “இயேசு நேசித்த சீடரின்” பராமரிப்பில் ஒப்படைக்கிறார்.
சிலுவையில் 4 வது வார்த்தை:
4.“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (மத்தேயு 27:46).
பொருள்:
ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்பதற்கு “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அர்த்தம்.
சிலுவையில் 5 வது வார்த்தை:
5.“தாகமாயிருக்கிறேன்” (யோவான் 19:28)
பொருள்:
தாகம் சாதாரணமான தாகமல்ல என்றும், அக்கினியின் மத்தியில் இருக்கிற ஒரு மனிதனுக்கு ஏற்படும் மரண தாகம் போன்றது என்றும் வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இது இயேசு அனுபவித்த நரக வேதனையைக் குறிக்கிறது.
சிலுவையில் ஆறாம் வார்த்தை:
6.“முடிந்தது” (யோவான் 19:30)
பொருள் :
“முடிந்தது” என்ற வார்த்தைக்கு பின்னால் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.
இயேசு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பட்ட பாடுகள் முடிந்தது.
இயேசுவின் உலக வாழ்க்கை முடிந்தது.
மனுக்குலத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லாம் முடிந்தது.
சிலுவையில் 7 வது வார்த்தை:
7.“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:46)
பொருள்:
இயேசு தம் உயிர் போகிற வேளையில் சத்தமாக “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்” என்று கூறினார்.