மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா.. மார்ச் 22ல் தேரோட்டம்.. கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 
mylapore-kapaleeswarar-temple

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

சென்னையில் உள்ள சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் அதிசிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருவர்.

இந்தாண்டு பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (மார்ச் 17) காலை 8.30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டமும், இரவு 9 மணிக்கு சந்திரவட்ட சேவையும் நடக்கிறது.

mylapore-kapaleeswarar-temple

பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வாக, வரும் 22ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு, பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.

வரும் 23-ம் தேதி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளல், எலும்பை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு வெள்ளி விமானத்தில், இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது.

mylapore-kapaleeswarar-temple

ஐந்திருமேனிகள் விழா, வரும் 24-ம் தேதி நடக்கிறது. 25-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், அன்று இரவு 7.45 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு, கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

From around the web