மிலாடி நபி விடுமுறை தேதி மாற்றம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
Leave

தமிழ்நாட்டில் மிலாடி நபி வரும் 17-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை இஸ்லாமியர்கள் மிலாடி நபி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கடைபிடித்து வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான மிலாடி நபி, வரும் செப்டம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுவதாக இருந்தது.

Nabi

இந்நிலையில், செப்டம்பர் 4-ம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்ங்களில் தெரியாததால், செப்டம்பர் 16-க்கு பதில், மறுநாள் செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்கள் முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழ்நாடு அரசு தற்போது செப்டம்பர் 17-ம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

GO

இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிவிக்கையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web