மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடைவிழா.. பக்தர்கள் பால்குட ஊர்வலம்

 
Mavadipannai

தூத்துக்குடி அருகே மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை அருகே மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு ஆவணி கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5-ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது. அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

Mavadipannai

மேலும் நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடை பெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடை பெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரா தனையும் நடைபெற்றது. அதைதொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலா சென்று பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

Mavadipannai

இன்று மதியம் பொங்கலிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

From around the web