மகாளய அமாவாசை 2024: முன்னோர்களின் ஆசிர்வாதம் கிட்ட செய்யக்கூடியவை.. செய்யக்கூடாதவை!

 
Amavasai

பித்ரு பட்சம் என்று அழைக்கப்படும் மகாளய அமாவாசை இந்துக்களிடையே மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாள் முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாக அற்பணிக்கப்படுகிறது. ஆன்மீகத்தில் உள்ள நம்பிக்கைகளின் படி, இந்த சமயத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆன்மாக்களை சாந்திபடுத்த பல்வேறு வகையான பூஜைகளை செய்து அவர்களை வழிபடுவது வழக்கம்.

முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் தங்களுடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒருவேளை மமகாளய அமாவாசை அன்று உங்களுடைய முன்னோர்களை நீங்கள் மகிழ்ச்சிபடுத்த விரும்புகிறீர்கள் என்றால் ஒரு சில விளக்கு பரிகாரங்களை செய்வதன் மூலமாக அதனை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.

மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு அனைத்து வகையான பூஜைகளையும் செய்வது ஒருவரை பித்ரு தோஷத்தில் இருந்து விடுவிப்பதாக நம்பப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

Amavasi

மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியது என்ன?

அன்றைய தினத்துல காகத்துக்கு உணவு வைக்கிறதும் அல்லது மாட்டுக்கு அகத்திக் கீரை கொடுப்பதும் ரொம்ப சிறப்பு. இது எல்லாருமே செய்யக்கூடிய விஷயம்.

உங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள கோவில் அல்லது கடல், ஆறு இருக்கும் இடங்களுக்கு சென்று நமது முன்னோர்களுக்கு படையல் போட்டு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய அமாவாசை தினத்தன்று உணவு, உடை, பணம் என ஏதாவது நம்மால் முடிந்த விஷயங்களை தானமாக செய்யலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு தானம் செய்யும் பொழுது பூரணமான பலன் நமக்கு கிடைக்கும். மாலை நேரத்தில் முன்னோர்களுடைய படத்தை வைத்து விளக்கேத்தி வழிபாடு செய்யலாம். 

அமாவாசை திதி

அமாவாசை திதி அக்டோபர் 1 இரவு 10.35-க்கு ஆரம்பித்து மூன்றாம் தேதி நள்ளிரவு காலை 12.34-க்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் திருமூர்த்தி பகவானை வழிபாடு செய்தால் நமக்கு கை மேல பலன் கிடைக்கும்.

மகாளய அமாவாசை தர்ப்பணம்

நமது முன்னோர்களை நினைவு கூறக்கூடிய ஒரு அற்புதமான சமயம் தான் இந்த மகாளய அமாவாசையில் கொடுக்கக்கூடிய தர்ப்பணம். இந்த தர்ப்பணம் கொடுக்கும்போது நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

Amavasai

மகாளய அமாவாசை வழிபாடு

எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் எனப் பார்த்தால், அக்டோபர் இரண்டாம் தேதி காலையில 6:00 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்தால் நல்லது. ஏனென்றால் சூரியன் இறங்கும் திசைக்கு வருவதற்கு முன்னால் தர்ப்பணம் கொடுப்பது நல்லது எனச் சொல்லுவார்கள். 

மகாளய அமாவாசை படையல்

மகாளய அமாவாசை அன்று படையல் போடும் நேரம் எனப் பார்த்தால் காலையில 11 மணிக்கு முதல் 12 மணி வரை செய்வது நல்லது. 

மகாளய அமாவாசை தீபம்

மகாளய அமாவாசை அன்று சிறந்த நேரமாகவும் கருதப்படும் மாலை 6:00 மணிக்கு மேல அகல் தீபம் ஏத்தி வழிபாடு செய்யலாம். வீட்டில் தினமும் பூஜை அறையில் ஏத்துற விளக்குகளை தவிர்த்து, புதுசா ஒரு அகழ் விளக்கு வாங்கி, அந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றி முன்னோர்களை வழிபாடு செய்வது நல்லது.

From around the web