ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

 
Siddhi Vinayagar

மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை சின்னகடை வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக கோவில் முழுவதும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு, இன்று (நவ. 1) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Dharmapuram Adheenam

கும்பாபிஷேகத்தையொட்டி 30-ம் தேதி காலை காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புனிதநீர் கலசம் யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 

இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் 4ம் கால பூஜை, பூர்ணாஹுதி செய்யப்பட்டு, கடம்புறப்பட்டு கோவிலை வலம்வந்தது. 

Dharmapuram Adheenam

தொடர்ந்து வேத மந்திரம் முழங்க விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, டாக்டர் ராஜசேகர், கோவில் தக்கார் ரவிச்சந்திரன், விஜயகுமார், சந்திரசேகர் மற்றும் சின்னகடை வீதி வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

From around the web