திருவண்ணாமலையில் பெரிய தேர் வெள்ளோட்டம்.. ஸ்ரீஅருணாசலேஸ்வரா் ரதத்தை காண குவிந்த பக்தர்கள்!

 
Tiruvannamalai

திருவண்ணாமலையில் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரிய தோ் என்று அழைக்கப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தேரின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஆன்மீக பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். இது சித்தர்கள் பூமி என்றும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதால் கைலாயத்திற்கு இணையான தலம் என்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். 

Tiruvannamalai

அந்தவகையில், இந்த வருடத்துக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் 4-ம் தேதியன்று கொடியேற்றமும், 10-ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும், 13-ம் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதையொட்டி அருணாசலேஸ்வரர் தேர் ரூ.70 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இந்த தேர் வெள்ளோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்துச் செல்கின்றனர்.


அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடையும் கொண்டதாகும். இதில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளது. நான்கு கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவார பாலகர் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

From around the web