ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் ஆவணி திருவோண விழா
Aug 31, 2023, 12:27 IST

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி திருவோண விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் பழமை வாய்ந்த திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி திருவோண விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவிலில் உள்ள அனந்த பத்மநாபன் சுவாமி சன்னதியில் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் ஆவணி திருவோண விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் அர்ச்சகர் ஐயப்ப பட்டர் மற்றும் பக்த சபையினர் சிறப்பாக செய்திருந்தனர்.