‘1000 ஆண்டு பொக்கிஷம்’.. மண்ணில் புதைந்து இருந்த பாழடைந்த சிவன் கோவில்.. சீரமைக்க இறங்கிய பொது மக்கள்!!

 
Vandavasi

வந்தவாசி அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் மண்ணால் மூடப்பட்டு பாழடைந்திருந்த நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரை ஒட்டி சுமார் ஆயிரம் ஆண்டுகள்  மிகவும் பழமை வாய்ந்த ஆளவாய் சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலின் மேல்பகுதி, ஓரம் முழுவதையும் ஏரிக்கரை ஓட்டி  இருப்பதால் ஏரி கரையை அகலப்படுத்தும்  போது மண்ணால் கோவில்  மேல் பகுதி மற்றும் ஓரம் முழுவதும் மண்ணால் மூடியதால் கோவில்  இருப்பதே தெரியாத நிலை இருந்தது. 

Vandavasi

மேலும் கோவில் கோபுரம்  மட்டும் சிதலமடைந்திருந்தது. பொதுமக்கள் கோவிலின் முன்புறம் உள்ள ஒருவர் மட்டும் அதுவும் குனிந்து செல்லும் அளவுக்கு வாசல் வழியாக பல ஆண்டுகளாக உள்ளே சென்று பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவில் மேல் பகுதி மற்றும் ஓரம் மூடியுள்ள மண்ணை அகற்றி கோவிலை சீரமைக்க கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து பொக்லைன் இயந்திரத்துடன் பொதுமக்கள்  கோவிலின் மேல் பகுதியில் மண்ணால்  மூடப்பட்டு இருந்த மண்ணையும்  பக்க வாட்டில் இருக்கும் மண்ணையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த கோவில் மேல் உள்ள மண்ணை அகற்றும் பணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பாத்து சாமி தரிசனம் செய்து சென்றனர். 

மேலும் பொதுமக்கள்  கூறுகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்து கோவிலின் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

From around the web