கார்த்திகை அமாவாசையில் செய்ய வேண்டிய விரதம்.. கிடைக்கும் பலன்கள்!!

 
karthigai-amavasai

கார்த்திகை மாத பௌர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே போல கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். இன்று இரவு வரை அமாவாசை உள்ளதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.

கார்த்திகை அமாவாசை நாளில் ஆறு குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் புனித நீராடினால் கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். இந்த நாளில் அனைத்து வித பாவங்களையும் போக்கும் பூஜைகளையும், வழிபாட்டையும் செய்யலாம். மேலும் குலதெய்வ வழிபாடு செய்தால் சிறப்பு. பசு, காகம் ஆகியவற்றுக்கு உணவளித்த பிறகு ஆதரவற்ற மக்களுக்குத் தானமளித்தால் புண்ணியம் பல மடங்கு பெருகும். 

karthigai-amavasai

இந்த மாதத்தில் இன்று காலை 6.35 மணிக்கு துவங்கும் அமாவாசை திதியில் இந்த விஷயங்களை செய்யும் பொழுது உங்களுக்கு நோய் நொடிகள் அண்டாது. தீராத பிணிகள் தீர கார்த்திகை அமாவாசையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

அதிகாலையிலேயே குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். சைவ உணவை மட்டும் சாப்பிட வேண்டும். இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன் வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரேமற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.

karthigai-amavasai

கார்த்திகை அமாவாசையான இன்று காலையிலோ அல்லது மாலையிலோ அன்னதானம் செய்வது நல்லது. பசு மாடுகளுக்கு பழம் அல்லது உணவு அளிப்பது நல்லது. அத்துடன் நம் முன்னோர்களுக்கு அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதும் சிறப்பு.

அப்படி செய்வதினால் முன்னோர்கள் நம்மை நன்கு ஆசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். மேலும் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சுக சம்பத்துக்கள் ஆகியவை சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

From around the web