ஸ்பெக்ட்ரம் ஏலம்… ரூ 5.66 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ 5.66 லட்சம் கோடிகளைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஏலம் மாலை 7 மணி வரையில் நடைபெறும். அதுகுறித்த தகவல்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் தினமும் ஏல முடிவில் வெளியிடும். ஏலத்தின் முதல் நாள் மட்டும் ரூ 53,531 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளன தொலைத் தொடர்பு நிறுவனங்கள். 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ரூ 5.66 லட்சம் கோடிகளைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஏலம் மாலை 7 மணி வரையில் நடைபெறும். அதுகுறித்த தகவல்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் தினமும் ஏல முடிவில் வெளியிடும்.

ஏலத்தின் முதல் நாள் மட்டும் ரூ 53,531 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளன தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.

1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகா ஹெர்ட்ஸுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்ஸுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்ஸுக்கு ரூ.2,100 கோடியாகவும், 700 மெகாஹெர்ட்ஸுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹர்ட்ஸ் மற்றும் 2,500 மெகாஹர்ட்ஸ் அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடியாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்ஸ் செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் விடப்படுகின்றன.

அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தில் தொலைத் தொடர்பு சேவை வழங்க முனைப்பாக உள்ள ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஐடியா செல்லுலர் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கு கொண்டன. இவை தவிர, டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்களும் அலைக்கற்றை ஏலத்துக்கான போட்டியில் கலந்து கொண்டன.

இந்த ஏலத்தின் மூலமாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருந்தொகையாக 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் வெற்றியடைந்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, மீதிப் பணத்தைச் செலுத்தியபின், அடுத்த 30 நாட்களுக்குள் அலைக்கற்றை சேவை வழங்கப்படும்.

From around the web