சருமத்தை பாதுகாக்கும் யோசனைகள் உங்களுக்காக!!!

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா ஒரு புறமும், வெயிலின் சுட்டெரிப்பும் நம்மை தினமும் பாடாய்படுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பயத்திற்காக மட்டுமல்ல நம் உடலின் ஆரோக்கியத்திற்காகவும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் இருப்பது நல்லது. தென்மேற்கு பருவ மழை பொழிந்தாலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லையே. வெயிலில் செல்லும் போது உருவாகும் வியர்வையில் இருந்து துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள், அரிப்பு,
 

சருமத்தை பாதுகாக்கும் யோசனைகள் உங்களுக்காக!!!உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா ஒரு புறமும், வெயிலின் சுட்டெரிப்பும் நம்மை தினமும் பாடாய்படுத்தி வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பயத்திற்காக மட்டுமல்ல நம் உடலின் ஆரோக்கியத்திற்காகவும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்லாமல் இருப்பது நல்லது. தென்மேற்கு பருவ மழை பொழிந்தாலும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லையே.

வெயிலில் செல்லும் போது உருவாகும் வியர்வையில் இருந்து துர்நாற்றம் வீசும். உடலில் வேர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள், அரிப்பு, அழுக்கு, தேமல் போன்றவை ஏற்படலாம். வெயிலின் தாக்கத்தால் சின்னம்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

சூரிய கதிர்கள் நேரடியாக உடல் மீது படும் போது தோல்கள் சுருங்கி, கருப்பாக மாறிவிடும்.இந்த காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறைய தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகளை அதிகமாக குடிக்க வேண்டும். உணவில் கீரை,பழங்கள், காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். குழந்தைகளை சூரிய வெப்பத்தின் நேரடி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும். வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஆடைகளை போடக்கூடாது.

நம் உடல் சூரிய ஒளியிலிருந்து தானே செய்து கொள்கிற பாதுகாப்பு நடவடிக்கை தான் உடல் கருத்துப் போதல். அதிகப்படியான கருமை நிறமுள்ள மெலனின் செல்களை உருவாக்குகின்றன.

எத்தனை வேலைகள் இருந்தாலும் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் வெட்ட வெளியில் அலைய வேண்டாம்.

A1TamilNews.com

From around the web